1 March 2022 By cprpublications 0

MUKTHIKKU VAZHI (VEEDUPERU ADAIYUM VAZHI)

by Naresh Gupta
ISBN : 978-9385459078

Publisher ‏ : ‎ CPR Publications; First edition (1 January 2021)
Language ‏ : ‎ Dravidian Languages



இந்த புத்தகமானது, இந்திய சமய தத்துவ சிந்தனைகளில் மேன்மை பெற்ற சில பேரறிஞர்களின் சீரிய கருத்துக்களின் சுருக்கமான ஒரு தொகுப்பாக அமைவதுடன், உலக பந்தங்களில் இருந்து விடுதலை பெற்று வீடுபேற்றை அடைவதற்கு, நமது புனித நூல்களிலும், அறிஞர்களுடைய எழுத்துக்களிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ள வழிமுறைகளை ஒன்றாக எடுத்து இயம்பும் ஒரு முயற்சி  ஆகும்.  நம்மை சூழ்ந்துள்ள அறியாமை எனும் அடர்ந்த  திரையை விலக்கி, மனிதர்கள்  துன்பங்களில் இருந்து விடுபட இந்த நூல்  உதவும் என்று நம்பப்படுகிறது.

இந்த புத்தகத்தை முதலில் ஆங்கிலத்தில் எழுதிய (பதிப்பு 2008) திரு. நரேஷ் குப்தா அவர்கள் 1973 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அன்னாருக்கு தமிழ்நாடு மாநிலத்தில் பணி ஒதுக்கப்பட்டது. பின் 1995-96ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் காந்திய சிந்தனை பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். அவர் அரசின் பல்வேறு துறைகளில் முக்கியமான பதவிகளை வகித்தார். மேலும், 2010 ஜூலை 31 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக எட்டு ஆண்டுகள் பணி புரிந்தார். ஓய்வுக்குப் பிறகு, 2011 மே மாதம் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் (Central Administrative Tribunal)  உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஜூலை 30, 2015 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார்.